Farewell Ceremony & Annual Get- Together


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் , பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்கள் கல்விச் சேவையில் இருந்து ஒய்வு பெற்றுச் செல்வதனை சிறப்பிக்கும் முகமாக நேற்று (31.12.2022) அன்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று வலயக்கல்வி அலுவலகத்தின் கேட்போர் இடம்பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் பிரியாவிடை வைபவமானது திரு.செபமாலை மகேந்திரகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் - நிர்வாகம்) அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.  இவ் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன். மேலும் அம்மணி அவர்களின் சேவையினைப் பாராட்டி வாழ்த்துக்களும் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.

Read more

 

 

 

 

 

Announcement Hits: 543
Print