Diamond Jubilee Celebration and "Nakulam" Book Release

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்  அம்மணி அவர்களின் சேவையைப் பாராட்டும் முகமாகவும், அறுபதாவது அகவையைச் சிறப்பிக்கும் முகமாகவும் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மணி விழா நிகழ்வுகள் சிறப்பான முறையில் நேற்று (8.12.2022). காலை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில்  விழாக்குழுத் தலைவர் துரை சபேசன்  (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

இவ் விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளர் மு.கோபாலரெத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து இவ் விழாவினைச் சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் அம்மணி அவர்களை சிறப்பிக்கும் முகமாக ”நகுலம்” எனும் மணிவிழா நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Announcement Hits: 592
Print